'கோட்டபாய தயங்கினார்.. அரை மணிநேரத்தில் முடிவெடுத்தேன்.." இறுதியுத்தம் குறித்து வெளியான முக்கிய தகவல்


மாவிலாறு அணை மூடப்பட்ட சமயத்தில் நான் சிங்கப்பூரில் இருந்து வராவிட்டால் இறுதி போர் நடைபெற்றிருக்காது என பீல்ட்மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இணையத்தளம் தளம் ஒன்றுக்கு வழங்கி செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ள அவர்,

 மாவிலாறு அணை மூடும்போது நான் சிங்கப்பூரில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தேன்.
குண்டுவெடிப்பில் வயிற்றில் ஏற்பட்டபெரும் துளையின் புண் ஆறாமல் தான் இருந்தது. ஆனால் அந்த பெரிய துளையால் உணவு வெளியேவருவது நிறுத்தப்பட்டிருந்தது. ஆனாலும் மருந்துபோட்டுக் கொண்டும், சேலைன் மற்றும் ஊசிகள் போட்டுக்கொண்டுமிருந்தேன்.

அப்போதும் எனக்கு சாப்பாடு வழங்குவதில்லை. ஒருநாளைக்கு 100 கிராம் தண்ணீர் மாத்திரமே கொடுக்கப்பட்டது.

அச்சந்தர்ப்பத்தில் நான் அணைமூடும் செய்தியை தொலைக் காட்சியில் தான் பார்த்தேன்.
அப்போது வைத்தியர்களிடம் நாட்டுக்கு போகவேண்டும் எனக் கேட்டேன். எமது நாட்டின் வைத்தியர்கள் இருவரும் இருந்தனர்,

 அவர்களிடம் மருந்து மற்றும் ஊசிகளைபெற்றுக் கொள்ளுமாறும் கூறினேன். அப்போது சிங்கப்பூர்வைத்தியர்களும் ஒத்துக் கொண்டனர். ஒன்றரை மாதம் சிங்கப்பூரில் இருந்தேன்.

பதில் இராணுவத் தளபதியாக இருந்தவர் நந்த மல்லவராச்சி. கோட்டாபய ராஜபக்சவின்வலது கை போல் இருந்தவர்.அத்தோடு அவரின் பாடசாலைத்தோழரும் கூட.

இராணுவத்தினர் பற்றாக்குறையால் யுத்தத்துக்கு செல்ல முடியாது என்றே அவர் கூறியிருந்தார்.அப்போது நான் நாட்டுக்குவந்து விட்டதாக தெரியப்படுத்தினேன்.

அப்போது கோட்டாபய, இராணுவத்தினர் பற்றாக்குறை காணப்படுகிறது, இதற்குஎன்ன செய்வது என்று கேட்டார்.

எனக்கு அரை மணித்தியாலம்தாருங்கள் என்ற கூறி, கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியுடன் கதைத்து பின்னர்,நாங்கள் இதை அடித்து பிடிப்போம் என்றேன். அவ்வாறே யுத்தத்தை தொடங்கினேன் என்றும் தெரிவித்தார்.